சென்னை,
2029-ல் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் விஜய் தான் என்று அக்கட்சியின் எம்.எல்.ஏ கனிமொழி கூறினார்.
தமிழக சட்டமன்றத்திற்கு இன்று வருகை தந்த தவெக எம்.எல்.ஏ. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“2029-ம் ஆண்டில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது தான் முக்கியமான விஷயம். ஆனால் இந்த முறை பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவதில்லை. தமிழ்நாட்டில் இருந்துதான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யப்போகிறார்கள். 2029-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை கண்டிப்பாக பார்க்கும்.
நமது தலைவர் விஜய்யை முதல்-அமைச்சர் பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான். அவரே நமது தலைவரின் கையை பிடித்து 2029-ல் பிரதமர் பதவியில் அமர வைப்பார். 2025-ல் கணித்தது 2026-ல் நடந்தது. அதேபோல் 2029-ம் ஆண்டும் நடக்கும்” என்று கனிமொழி தெரிவித்தார்.