தமிழக செய்திகள்

‘விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்’ - அமைச்சர் வினோத்

நெல்லையில் இன்று விவசாயிகளை சந்தித்து அமைச்சர் வினோத் ஆலோசனை நடத்தினார்.

நெல்லை,

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் 17.5 சதவீத ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மழைக்கால பாதிப்புகளை தவிர்க்க நெல் சேமிப்பு கிடங்குகளில் நேரில் ஆய்வு செய்த அவர், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், நெல்லையில் இன்று விவசாயிகளை சந்தித்து அமைச்சர் வினோத் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கருத்துகளை கூறியிருக்கிறார்கள். இந்த மண்டலத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரவும், தடுப்பணைகள் கட்டவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் இருக்கும்” என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், “ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. அது எப்போது வழங்கப்படும்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வினோத், “அது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பட்ஜெட்டில் அது பற்றி அறிவிப்போம்” என்றார்.