விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் சாலையில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ‘அன்பு இல்லம்’ 4-வது கிளை தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்று முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.
அங்குள்ள உணவு தயாரிக்கும் அறையில், சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான உணவுகள் தயாரிக்கப்படுவதை அமைச்சர் ஜெகதீஸ்வரி பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, ‘அன்பு இல்லம்’ போன்ற முதியோர் இல்லங்களும், ஆதரவற்றோர் இல்லங்களும் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதே தமிழக வெற்றிக் கழக அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.
இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொதுமக்கள் இதுபோன்ற நல்ல மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.