வடக்கன்குளம்:
ஆண்டுதோறும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலும் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் கடற்கரை மணலில் முட்டையிட்டு செல்வது வழக்கம். இந்த முட்டைகளை வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் சேகரித்து, அவற்றை குறிப்பிட்ட இடத்தில் பாதுகாத்து, முட்டையில் இருந்து ஆமை குஞ்சுகள் பொறித்து வெளியே வந்ததும் கடலில் விடுகின்றனர்.
அதன்படி வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த பஞ்சல் கடற்கரை பகுதியில் வனத்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட ஆமை முட்டைகள் மூலம் பொறித்த 110 கடல் ஆமை குஞ்சுகளை மாவட்ட வன அலுவலர் முருகன், வனச்சரக அலுவலர் சரவணகுமார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் விட்டனர்.