தமிழக செய்திகள்

‘ஆரம்பமே அமர்களம்’... விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.

சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் பதவியேற்றுக்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று மற்ற சில கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக, சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரனும், துணை சபநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை மரபுபடி அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இரு கைகளை பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்திப் பேசினர்.

அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் பேசியதாவது:-

காமராஜரை சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்றது போல, திமுக தலைவர், மதிமுக பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் தலைவர், பாமக தலைவர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர், இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை முதல்-அமைச்சர் விஜய் பாதுகாத்து இருக்கிறார். மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு ஆரம்பமே அமர்க்களம்படுத்தியுள்ளார் என்று கூறினார்.