தமிழக செய்திகள்

பெங்களூரு - காரைக்கால் எக்ஸ்பிரஸ் இனி திருவாரூர், நாகை, நாகூருக்கு முன்கூட்டியே வரும்

மற்ற ரெயில் நிலையங்களுக்கு இந்த ரெயில் வருவதில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெங்களூருவில் இருந்து காரைக்கால் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16529) வரும் 3-ந் தேதி (புதன்கிழமை) முதல் திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் ரெயில் நிலையங்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக வரும்.

மற்ற நிலையங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை

அதாவது, திருவாரூருக்கு இதுவரை இரவு 9.20 மணிக்கு வந்த ரெயில் இனி 9.05-க்கும், நாகப்பட்டினத்திற்கு இதுவரை இரவு 9.52 மணிக்கு வந்த ரெயில் இனி இரவு 9.37-க்கும், நாகூருக்கு இதுவரை இரவு 9.52 மணிக்கு வந்த ரெயில் இனி இரவு 9.54-க்கும் வந்துசேரும். மற்ற ரெயில் நிலையங்களுக்கு இந்த ரெயில் வருவதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.