தமிழக செய்திகள்

அரசூர் அருகேமலட்டாறு பாலத்தின் கீழ் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம்கொலையா? போலீசார் விசாரணை

அரசூர் அருகே மலட்டாறு பாலத்தின் கீழ் ரத்த காயங்களுடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அரசூர்,

ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் கிராமத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள மலட்டாறு பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று மதியம் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்தபடி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?. அவரை யாரேனும் அடித்து கொலை செய்து மேம்பாலத்தின் கீழ் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

SCROLL FOR NEXT