மதுராந்தகம்,
பிரசாரத்திற்கு வந்த தவெக வேட்பாளர் ஆட்டோ ஓட்டியும், டீ போட்டு கொடுத்தும் வாக்குகளை சேகரித்தார்.
மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் மரகதம் குமரவேல், தொடர்ந்து 6-வது நாளாக தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுராந்தகம் தொகுதியான அத்திரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட திருமேற்கண்டிகை, கடமலைப்புத்தூர், தொழுப்பேடு, ஆத்தூர், வில்லியம்பாக்கம், உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
கடமலைப்புத்தூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்தபோது, அப்பகுதி பொதுமக்கள் மரகத குமரவேலுக்கு ரோஜா மலர்களை தூவியும், ஆட்டம் பாட்டத்துடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த ஆட்டோ நிறுத்தத்துக்குச் சென்ற அவர், ஆட்டோவை ஓட்டி அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.
பின்னர் அருகில் இருந்த டீக்கடைக்குச் சென்று சுடச்சுட டீ போட்டுக் கொடுத்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். இதனால் கடமலைப்புத்தூர் பகுதியில் தவெக வேட்பாளரின் பிரசாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது