தமிழக செய்திகள்

இளைஞர்​களைக் கண்டு மத்​திய பாஜக அரசு பயப்படு​கிறது - கார்த்தி சிதம்பரம்

தேர்தல் ஆணையர் விவகாரத்தில் எதிர்க்​கட்​சிகள் நிலை​மையை மதிப்​பிட்டு அதற்​கேற்ப தகுந்த நடவடிக்​கைகளை எடுப்​போம் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இளைஞர்​களைக் கண்டு மத்​திய பாஜக அரசு பயப்படு​கிறது. இந்​தி​யா​வின் இளைஞர்​களின் கூர்​மை​யான கேள்வி​களுக்கு அவர்​களால் பதிலளிக்க முடிய​வில்​லை. தற்​போதைய சூழ்​நிலை, வாய்ப்​பு​கள் இல்​லாதது, குறிப்​பாகத் தேர்வு முறை​யில் இப்​போதும் நில​வும் அநீதி மற்​றும் இந்த அரசின் தன்னிச்​சை​யான போக்கு ஆகிய​வற்றால் இளைஞர்​கள் மிகுந்த ஏமாற்​றமடைந்​துள்​ளனர்.

இந்த விவ​காரத்​தில் எதிர்க்​கட்​சிகள் நிலை​மையை மதிப்​பிட்டு அதற்​கேற்ப தகுந்த நடவடிக்​கை​களை எடுப்​போம். இந்த விவகாரத்​தில் இந்தியா கூட்​ட​ணி​யின் தலை​வர்​கள் அனை​வ​ரும் மீண்​டும் கூடி உரிய நடவடிக்​கை​களை எடுப்​பார்​கள்.

தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் நடை​முறைப்​படுத்​துதல் மற்​றும் அதன் வடிவ​மைப்​பு, குறிப்​பாக 6 மற்​றும் 7 படிவங்​கள் குறித்த விவ​காரங்​களை வெளிச்​சம் போட்​டுக் காட்ட இந்தியா கூட்​டணி அனைத்து அமைப்​பு​களை​யும் சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ளது. இவ்வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT