தமிழக செய்திகள்

வெங்காய கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,125 ஆக உயர்த்தியது மத்திய அரசு

விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் வெங்காயத்தின் விலையை 13.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

சென்னை,

வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு தற்காப்பு இருப்பிற்காக விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யும் வெங்காயத்தின் விலையை 13.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

இதன்படி, இதுவரை ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,875 ஆக இருந்த கொள்முதல் விலை, தற்போது ரூ.2,125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு. நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. நடப்பு நிதி யாண்டில் வெங்காய உற்பத்தி 3.07 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் உற் பத்தியோடு ஒப்பிடுகையில் சமமான அளவாகும். தற்போதைய நிலவரப்படி, அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோவுக்கு ரூ.31 ஆக உள்ளது.

பற்றாக்குறை

தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கியதாலும், சில பகுதிகளில் மழை பற்றாக்குறையாலும், வியாபாரிகள் சிலர் வெங்காயத்தை வணிக அடிப்படையில் வாங்கிச் சேமிக்கத் தொடங்கியதே சமீபத்திய விலை உயர்வுக்குக் காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், தரமான வெங்காய இருப்பு அரசிடம் போதிய அளவில் உள்ள தால், வரும் பற்றாக்குறை காலங்களில் அவை சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளது.