தமிழக செய்திகள்

முத்துசுவாமி தீட்சிதரைப் பெருமிதப்படுத்திய மத்திய அரசு: நயினார் நாகேந்திரன் நன்றி!

முத்துசுவாமி தீட்சிதரின் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நினைவு நாணயத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், முத்துசுவாமி தீட்சிதரைப் பெருமிதப்படுத்திய மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

நினைவு நாணயம் வெளியீடு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

முத்துசுவாமி தீட்சிதரைப் பெருமிதப்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும், 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனை இயற்றியவருமான முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரைப் போற்றும் விதமாக நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பிரதமருக்கு நன்றி

திருவாரூரில் பிறந்து, இசை உலகில் தன்னிரகற்றுத் திகழ்ந்து, கர்நாடக இசையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முத்துசுவாமி தீட்சிதரைப் பெருமைப்படுத்தும் விதமாக, இத்தகைய சீரிய முயற்சியை எடுத்த நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT