தமிழக செய்திகள்

‘மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர்’ - மு.வீரபாண்டியன்

அதிகாரிகள் முதல்-அமைச்சரை வழிநடத்தக் கூடாது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இது அதிகாரிகளின் ஆட்சி அல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் வேலையாட்கள்தான் அதிகாரிகள். இங்கு அதிகாரம் இருப்பது மக்களுக்குதான். மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருப்பவர் முதல்-அமைச்சர்.

அதிகாரிகள் முதல்-அமைச்சரை வழிநடத்தக் கூடாது. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக இருக்கும் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும். ஆனால் இங்கு தலைகீழாக இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT