தமிழக செய்திகள்

டெல்லியில் தொடங்கிய பிரசாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கியது - ஆதவ் அர்ஜுனா

மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

டெல்லியில் தொடங்கிய பிரசாரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டது.

அதிகாரத்தால் நம்மை முடக்க நினைத்தார்கள், அவதூறுகளால் நம்மை அழிக்க நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி முன் இவை அனைத்தும் தோற்றுப் போனது. இனி நம்மை முடக்க நினைத்த அதே சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் முழக்கம் ஓங்கி ஒலிக்கும். எந்த மக்களிடையே நம் மீது வெறுப்பை பரப்ப அதிகார வர்க்கம் முயன்றதோ அதே மக்களின் ஆதரவோடு இனி ஒவ்வொரு ஊரிலும் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழும்.

இனி விசில் சத்தம் வீதிகளெங்கும் ஒலிக்கட்டும்.

மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும்.

எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும்.

Let the battle to reclaim the people's power begin!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.