தமிழக செய்திகள்

‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது: ஏ.ஆர்.ரகுமான்

‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைவு; ஏ.ஆர்.ரகுமான் இரங்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT