தமிழக செய்திகள்

‘கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது’ - அமைச்சர் ராஜ்மோகன்

தி.மு.க. அமைச்சரவையில் ஐ.யூ.எம்.எல். கட்சிக்கு ஏன் ஒரு இடம் கூட கொடுக்கவில்லை? என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை,

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க.வின் தயவில்தான் த.வெ.க. அரசு ஆட்சி அமைத்திருப்பதாக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “108 சட்டமன்ற உறுப்பினர்களோடு, கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து அமைச்சரவையில் இடம்கொடுத்து முதல்-அமைச்சர் விஜய் த.வெ.க. ஆட்சியை கொண்டு செல்கிறார். இதில் யார் தயவும் யாருக்கும் தேவையில்லை.

கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது. காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டுகள் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சி அமைத்திருக்க முடியுமா? சுதந்திர இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) கட்சிக்கு ஏன் தி.மு.க. அமைச்சரவையில் ஒரு இடம் கூட கொடுக்கவில்லை?

ஆனால் முதல்-அமைச்சர் விஜய், ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று சொன்னதை செய்திருக்கிறார். எனவே, மக்களின் தயவில்தான் ஆட்சி நடக்கிறதே தவிர, வேறு யாருடைய தயவும் கிடையாது” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT