தமிழக செய்திகள்

திராவிட மாடல் , துரத்தியடித்த மக்கள் ! : நடிகை கஸ்தூரி

தளபதி விஜய்க்கும், அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 107, திமுக 75, அதிமுக 53 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக 2-ம் இடத்தில் உள்ளது.

சட்டமன்ற தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில்,நடிகை கஸ்தூரி தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொட்ர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தளபதி விஜய்க்கும், அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தீயசக்தி திமுகவிற்கு டாடா. கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர். மன்னர் குடும்பத்துக்கு டாடா. மகன் மருமகன் ஸ்நேக் பாபு அட்ரோசிட்டிக்கு ஆப்பு.

திராவிட மாடல் , துரத்தியடித்த மக்கள் !

ஸ்டாலின் விலகட்டும், தமிழ்நாடு தப்பிக்கட்டும் !

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.