தமிழக செய்திகள்

மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் சாவு

தூத்துக்குடி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை இந்திராநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மகன் பால்பாண்டி (வயது 39). இவர் தனியார் எண்ணெய் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பால்பாண்டி மொட்டை மாடியில் தூங்குவதற்காக சென்றார். நேற்று காலையில் அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பால்பாண்டிக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

SCROLL FOR NEXT