கள்ளக்காதல் 
தமிழக செய்திகள்

வட்டிக்கு விட்ட இடத்தில் மலர்ந்த கள்ளக்காதல்... இடையூறாக இருந்த டிரைவர்..கோர்ட்டு வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

கோவிந்தராசு நதிவை அவ்வபோது அழைத்து தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

கடலூர்,

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த டிரைவரை கொலை செய்த விவகாரத்தில் மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 40). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு நதியா (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

பணம் கொடுக்கல்-வாங்கலில் பழக்கம்

இந்நிலையில் நதியா, பண்ருட்டியை அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (52) என்பவரிடம் வட் டிக்கு பணம் வாங்கியுள்ளார். பின்னர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற் பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருவதால் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோவிந்தராசு நதிவை அவ்வபோது அழைத்து தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

கணவர் கண்டிப்பு

இதுபற்றி அறிந்த ஜெகதீசன், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவர்கள் 2 பேரையும் கண் டித்தார். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் கோவிந்த ராசுவும், நதியாவும் கள்ளக்காதலை தொடர்ந்தனர். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கோவிந்தராசுவும், நதியாவும் தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ஜெகதீசனை கொலை செய்ய திட்டமிட்டனர்.

கடந்த 18.9.2021 அன்று நடந்த தகராறில் மண்வெட்டியை எடுத்து கோவிந்தராசு, நதியா ஆகி யோர் ஜெகதீசனை சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நதியா, கோவிந்தராசு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர்.

இவ்வழக்கில் அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி சரஸ்வதி தனது தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நதியா, கோவிந்த ராசு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT