தமிழக செய்திகள்

அனைவரும் வாக்களிப்பதற்கான வழிவகையை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும்: அண்ணாமலை

தென் தமிழகத்திற்கு செல்லக்கூடிய பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.

கோவை

கோவையில் வாக்கு செலுத்திய பின் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் காலையிலிருந்து எல்லோரும் சிறப்பாக ஜனநாயக கடமையை ஆற்றி கொண்டு உள்ளார்கள். அனைவரும் நிச்சயமாக ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாரும் வாக்களிக்காமல் வீட்டில் இருந்து விடாதீர்கள்

84 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைதியான மாநிலம் தான் அதிக அளவிலான பிரச்சினைகள் எதுவும் இருக்காது. அந்த இரண்டு மூன்று தினங்களாக பல்வேறு பகுதிகளில் பணம் கொடுப்பது நகைகள் கொடுப்பது கோவிலும் அதிக பண பட்டுவாடா நடப்பது போன்ற சம்பவங்கள் உள்ளது

சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு செல்லக்கூடிய பேருந்து வசதிகள் குறைவாக உள்ளது. கோவையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்து வசதிகளும் குறைவாக உள்ளது என்று வாக்காளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தேர்தல் ஆணையம் இன்னும் இந்த வசதிகளை சிறப்பாக செய்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து

தேர்தல் ஆணையம் இன்னும் கவனம் செலுத்தி அனைவரும் வாக்களிப்பதற்கான வழிவகையை செய்ய வேண்டும். பல்வேறு பகுதிகளில் பணம் பட்டுவாடா தைரியமாக நடக்கிறது வாக்காளர்களுக்கு அணிகலன்களை கொடுக்கிறார்கள். சாதாரண மக்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் தேர்தல் ஆணையத்திடம் மாட்டிக் கொள்ள வேண்டிய உள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அண்ணன் அர்ஜுனன் போராட்டம் செய்ததை கூட பார்க்க முடிந்தது அதையெல்லாம் வாக்காளர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர். மிக நேர்மையாக தான் நடந்துள்ளது தேவையில்லாமல் வாக்காளர்களை நீக்கவில்லை தமிழகத்தில் நடுநிலையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வழக்கமானதை காட்டிலும் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது

பணப்பட்டுவாடா மற்றும் நகைகளை தைரியமாக கொடுப்பதை எல்லாம் நான் பார்த்ததில்லை. திமுக பல்வேறு தவறுகளை செய்கிறார்கள் அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். நான் எப்பொழுது வந்தாலும் பிரவுன் பேண்ட் வெள்ளை சர்ட் அணிந்து கொண்டு தான் வருவேன். இதே ஆடையை தான் ஜெகன்மோகன் ரெட்டி விஜய் ஆகியோர் அணிகிறார்கள்,

நான் காவல் துறையில் இருந்து வெளியில் வந்ததால் எப்பொழுதும் என்னுடனே இது இருக்க வேண்டும் என்று இதனை அணிகிறேன் என்னுடைய ஜனநாயக கடமையை நான் செய்து வருகிறேன். என்னை எந்தப் பக்கமும் சேர்த்து விடாதீர்கள்

கடந்த இரண்டு மூன்று தினங்களாக தமிழகத்தில் விரும்பத் தகாத செயல்கள் நடைபெற்று உள்ளது திமுக அதனை செய்துள்ளது. அனைவரும் முறைப்படி வாக்கு செலுத்துவார்கள் என்று நம்புகிறேன் இந்த தேர்தலில் ஜனநாயகம் தான் ஜெயிக்கும் பணம் எப்பொழுதும் ஜெயிக்காது. மக்கள் சரியாக வாக்களித்தால் நல்லவர்கள் ஜெயிப்பார்கள்

என்னதான் தேர்தல் ஆணையமாக இருந்தாலும் அதில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தான். தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை சரியாக செய்ய தவறிவிட்டது என்பது தான் என்னுடைய கருத்து. தேர்தல் நடைமுறை வருவதற்கு முன்பே செய்ய வேண்டியது எல்லாம் செய்து விட்டார்கள் தேர்தல் ஆணையம் அதனை கண்காணித்திருக்க வேண்டும். புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாக்காளர்கள் மனசாட்சிக்கு உட்பட்டு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.