சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு விவகாரம், தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதனிடையே தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அதன்படி திமுக - 165*, காங்கிரஸ் - 28, தே.மு.தி.க. - 10, விடுதலை சிறுத்தைகள் கட்சி - 8, இந்திய கம்யூனிஸ்டு கட்சி - 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி - 5, ம.தி.மு.க. - 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2, மனிதநேய மக்கள் கட்சி - 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, மனிதநேய ஜனநாயக கட்சி - 1, எஸ்.டி.பி.ஐ. -1, முக்குலத்தோர் புலிப்படை - 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தி.மு.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது.. கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை கொடுப்பது என்ற பட்டியல் இன்றைக்குள் முடிவு செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார்.
இதன்படி திருவாரூரில் ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்க உள்ளார். மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் அவர், ஏப்ரல் 21ம் தேதி கொளத்தூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
முழு விவரம்:-