சென்னை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து விட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றும் (சனிக்கிழமை), 6-ந் தேதியும் மட்டுமே அவகாசம் இருக்கிறது.
தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டன. முன்னதாக அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டது.
இதேபோல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுத்தடித்தது போன்று வேட்பாளர்கள் தேர்விலும் இழுத்தடிப்பு நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மதுரை மேலூர் தொகுதி தவிர்த்து மற்ற 27 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சித் தலைவர்களும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- காலை 9 மணி-நாகர்கோவில், மாலை 5 மணி- சங்கரன்கோவில்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:- மதியம் 3 மணி- ஆரணி, மாலை 5 மணி- விழுப்புரம்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.- காலை 11 மணி- மணப்பாறை, மாலை 4 மணி- ஸ்ரீரங்கம், மாலை 6 மணி- குளித்தலை, இரவு 8 மணி - கிருஷ்ணராயபுரம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- காலை 9 மணி- சித்தலவாய், காலை 10 மணி- குளித்தலை,மாலை 6.30 மணி- திண்டிவனம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம்:- கடலூர்
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன்:-சென்னை
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:- இரவு 7 மணி- அம்பத்தூர், இரவு 9 மணி- பெரம்பூர் தொகுதியில் உள்ள கொடுங்கையூர்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்:-மாலை 4 மணி- போளூர்.
த.வெ.க. தலைவர் விஜய்:-
புதுச்சேரி