தமிழக செய்திகள்

ஏரியில் மூழ்கி விவசாயி பலி

ஏரியில் மூழ்கி விவசாயி பலியானார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வீரமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50), விவசாயி. இவர் நேற்று காலை வேள்விமங்கலம் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அங்கு சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT