செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சம்பவம் வருமாறு:-
மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேட்டை அடுத்துள்ள தாமரைக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் விஜய். 30 வயதான இவர் கட்டிட வேலை செய்து வந்தார். இந்தநிலையில், அதே ஊரை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் விஜய்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி விஜய் வீட்டுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
இது அந்த பெண்ணின் தந்தையான தேவராஜிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. 68 வயதான அவர் விஜயை அழைத்து கண்டித்துள்ளார்.இருப்பினும் விஜய் தான் விரும்பிய பெண்ணுடன் கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளார். இந்தநிலையில், வீட்டில் இருந்து விஜய் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி பாத்தனர்.
அப்போது தாமரைக்கேணி கிராமத்தில் ஒரு தோப்பு அருகில் காலில் வெட்டு காயத்துடன் விஜய் இறந்துகிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் சூனாம்பேடு போலீசார் விரைந்து சென்று விஜய்யின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். அக்கம் பக்கத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் விஜய்யின் கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து விஜய்யுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை தேவராஜை பிடித்து போலீசார் விசாரணை நடஹ்தினார்கள். அப்போது அவர் விஜய்யை தனது 17 வயது பேரனான பள்ளி மாணவருடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்து இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
விஜய் கள்ளக்காதலியின் வீட்டுக்கு சென்று விட்டு இரவில் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தேவராஜ் தனது பேரனுடன் பின் தொடர்ந்து சென்று அரிவாளால் காலில் வெட்டினார். இதில் விஜய் துடிதுடித்து கீழே விழுந்தார். காலில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருநுது அவரால் தப்பி செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் தேராஜும் அவரது பேரனும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து விஜய் வாயில் ஊற்றினார்கள் .
ஏற்கனவே காலில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் உடலில் விஷமும் கலந்ததால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து விஜய் உயிரிழந்தார்.பின்னர் எதுவும் தெரியாதது போல தேவராஜும் அவரடு 17 வயது பேரனும் ஊருக்குள் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. தேவராஜ் கொடுத்த தகவலின் பேரில் பேரனையும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் தேவராஜ் சிறையில் அடைக்கபப்ட்டார். 17 வயது சிறுவன் தற்போது பிளஸ் 1 முடித்து உள்ளார். அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.இந்த சம்பவத்தில் தொடர்பாக 17 வயது சிறுவனிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவன் தாத்தாவுடன் சேர்ந்து தாயுடன் தவறான உறவில் இருந்த விஜய்யை தீர்த்து கட்டியதாக திடுக்கிடும் தகவலையும் தெரிவித்துள்ளான்.
கள்ளக்காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் தாத்தாவுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.