சென்னை,
தமிழகத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
இதற்காக தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை இன்றும், 2-ம் தவணை மார்ச் மாதம் 11-ந் தேதியும் கொடுக்கப்பட வேண்டும்.
பெருநகர சென்னை மாநகரில் 5 வயதிற்குட்பட்ட சுமார் 7.06 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,640 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் முதல் அமைச்சர் பழனிசாமி போலியோ சொட்டு மருந்து முகாமினை இன்று தொடங்கி வைத்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து, அவர்களுக்கு இனிப்பு மற்றும் பொம்மைகள் வழங்கினார்.
#Poliodrop #CM #Chennai #EPS #EdappadiPalanisamy