சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் தூய்மைப் பணியாளர் ஒருவரே நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் காணொளி காட்சி, மக்கள் நலனில் அக்கறையில்லாத முந்தைய திமுக ஆட்சியின் நீட்சியே தவெக ஆட்சி என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த லட்சணத்தில், தனது சொந்தத் துறையில் நிலவும் இதுபோன்ற சீர்கேடுகளைக் களைவதை விடுத்து, தேவையற்ற விஷயங்களில் கருத்து சொல்லி காலத்தை விரயம் செய்து, மக்கள் உயிரோடு விளையாடி வருகிறார் தவெக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ். மொத்தத்தில், தவெக ஒரு மாற்று சக்தி அல்ல, ஏமாற்று சக்தி என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு தேவையில்லை!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.