தமிழக செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது - கனிமொழி எம்.பி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை,

குரூப்2, குரூப்2 ஏ தேர்வு முறைகள், பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் முறைகளில் மாற்றம் செய்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. இந்த முறை வரும் தேர்வில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுகளில் இருந்து தமிழ் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசு பணியில் சேர்வதற்கே இது வழிவகுக்கும், தமிழ அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT