நெல்லை,
நெல்லையில் திமுக நிகழ்ச்சியில் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மும்மொழிக் கல்வித் திட்டத்தை திமுக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் திமுக உள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள அரசும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மும்மொழிக் கல்வித் திட்டத்தை எதிர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் மொழித் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது." எனக் குறிப்பிட்டார்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிப் பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலம் நடப்பு கல்வியாண்டு முதல் இந்த மும்மொழித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு இந்திய மொழிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும். இத்துடன் வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்யலாம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.