சென்னை,
வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.
மத வெறியர்களின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமல், உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.