தமிழக செய்திகள்

தேர்தலில் தோல்வி அடைந்த வாரிசுகள்..!

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளன.

சென்னை,

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி, த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்தன. அத்துடன், முக்கிய அரசியல் தலைவர்களின் வாரிசுகளும் இந்த தேர்தலில் தோல்வியடைந்தனர். அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். த.வெ.க. வேட்பாளர் பரணி பாலாஜி இரண்டாவது இடம் பெற்றார். கவுதமசிகாமணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பா.ம.க. முன்னாள் கவுரவத்தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கினார். ஆனால் அந்த தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் கஜேந்திரன் வெற்றி பெற்றார். பா.ம.க. 2-வது இடத்தை பெற்றது. தமிழ்குமரனுக்கு 3-வது இடமே கிடைத்தது.