தமிழக செய்திகள்

தனியாக வீட்டில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்... முகமூடி கொள்ளையன் செய்த கொடூரம்!

மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை முயற்சி செய்து அவரிடம் இருந்த 7.5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

மயிலாடுதுறை,

தனியாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டியை கழுத்தை நெறித்து அவரிடம் இருந்த தங்க நகைகளை முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றுள்ளார்.

கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பாடகச்சேரி கிராமத்தில் நள்ளிரவில் தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் புகுந்தார். அவர் அங்கு உறங்கி கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டி, அவரது கழுத்தை நெறித்து அவரிடம் இருந்த 7.5 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

விசாரணை

இது குறித்து மூதாட்டி மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மூதாட்டி அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT