தமிழக செய்திகள்

தஞ்சையை உலுக்கிய சம்பவம்: கணவர் குறித்து இன்ஸ்டா அட்சயா கூறும் பகீர் தகவல்

என்னை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ எதுவும் இப்போது எடுத்தது இல்லை என அட்சயா கூறியுள்ளார்.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜா (வயது 40) இவரது மனைவி அட்சயா (வயது 35) இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். அட்சயா பி.ஏ. படித்தவர்.

கணவன் - மனைவி தகராறு

கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை மயில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ராஜா அட்சயா தம்பதியினர் குடியேறினர். அட்சயாவுக்கும் ஜோஸ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

வீடியோ வைரல்

சம்பவத்தன்று அட்சயாவும், ஜோசுவும் தனியாக வீட்டில் இருந்ததை அறிந்து அங்கு வந்த தர்மராஜ கதை தட்டி உள்ளே சென்று வாக்குவாதம் செய்ததையும், அங்கிருந்த வாலிபரை அடித்து விரட்டியதும் வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவத்தில் அட்சயாவின் முகத்தில் கத்தியால் குத்திய தர்மராஜா தனது மகனும் மாயமானார். அவரை போலீசார் மீட்டனர். கொலை முயற்சி வழக்கில் தர்மராஜாவை கைது செய்தனர். இந்த தம்பதியினரின் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.

கத்திக்குத்து காயத்திற்கா தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அட்சயா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கணவர் குறித்து பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார். அதில்,

மொட்டை அடித்து சித்ரவதை

என்னை பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ எதுவும் இப்போது எடுத்தது இல்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டது. இந்த வீடியோவை அவர் தவறாக எதுவும் பயன்படுத்தக்கூடாது. சமூக வலைதளங்களில் பரப்ப கூடாது என போலீஸ் நிலையத்தில் 2 பேர் மீதும் புகார் இருக்கிறது.

நான் வேலைக்கு செல்ல கூடாது என எனக்கு மொட்டை அடித்தார். மொட்டை அடித்த வழக்கில் கூட இந்த வீடியோவை காண்பித்து தனது பக்கம் நியாயம் இருப்பது போல் அனுதாபம் தேடிகொண்டார். இந்த வீடியோவை அவர் தவறாக பயன்படுத்தி வருகிறார். அவருக்கு கோபம் வந்துவிட்டால் என்னை அடித்து துன்புறுத்துவார்.

விடுதி

இதனால் தான் ஓர் ஆண்டாக அவரை பிரிந்து வாழ்கிறேன். நான் விடுதியில் தங்கி இருந்தபோது வேண்டுமென்றே வந்து என்னிடம் வம்பு இழுத்தார். பக்கத்து அறையில் இருந்தவர்களிடம் வேண்டுமானாலும் பேச சொல்கிறேன்.

இப்பொழுது என்னுடன் சேர்ந்து வாழ வருகிறேன் எனக்கூறி தன்னை தானே சிகரெட்டால் சுட்டுக்கொண்டார். நான் வேலைக்கு சென்று விட்டால் என் மகனை கூட கொடுமைபடுத்துவார்.

இவ்வாறு அட்சயா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.