தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் பொதுவாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிகச்சிறப்பாகவும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும்படியும் இருக்கும். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் சீசன் மேலும் சில நாட்கள் வரை இருக்கும்.
எல் நினோ காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்தது. இதனால் பல குற்றால அருவிகளில் பல நாட்களில் குறைந்த அளவே நீர்வரத்து இருந்தது. இதற்கிடையே தற்போது அருவிகளில் நீர் வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. அத்துடன், குற்றால சீசன் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.