தமிழக செய்திகள்

அகல்யா பாய் ராணியின் புகழை மனதில் தாங்க வேண்டும் - கவர்னர் அர்லேகர்

காசி விஸ்வநாதர் கோவிலின் முகப்பில் ராணி அகல்யா பாய் சிலையை அமைத்து ஓர் பெருமைக்குரிய வரலாற்றை மத்திய அரசு மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

சென்னை,

தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மிகப்பெரிய நதியின் உற்பத்தி ஒரு மழைத்துளியில் தொடங்குகிறது

மனம் தளராது

ராணி அஹலியா பாய் ஒரு சாதாரண குடும்பத்தில் 1725 ஆம் வருடம் மே மாதம் 31ஆம் தேதி அன்று மராட்டிய மாநிலத்தில் பிறந்தார். கணவர் ராவ் ஹோல்கரை யுத்தத்தில் பலி கொடுத்தார். மகனும் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மனம் தளராது பொது வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்தார் ராணி அஹலியா பாய்.

ராணி

அஹலியா பாய் இந்தூர் ராணியாக 1725 ஆம் ஆண்டு பட்டம் ஏற்றார். மக்கள் தம்மோடு எளிதாக பழகவும், தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும் வழிவகை செய்தார். தம் அரண்மனையில் அனைத்து மக்களும் அனு தினமும் உணவருந்த ஏற்பாடு செய்தார்

கோவில்களை சீரமைத்தார்

முகலாய படையெடுப்பினாலும் சூறையாடலினாலும் பல கோவில்கள் சேதமடைந்திருந்ததை கண்டு வருந்திய ராணி அவற்றை சீரமைத்தார். குஜராத்தில் உள்ள துவாரகாதீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கயா விஷ்ணுபாத கோவில், உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோவில், நாசி திரியம்பகேஸ்வரர் கோவில் என சிறப்பு மிகுந்த பல கோவில்களை மீண்டும் கட்டி எழுப்பினார்.

அஹலியா பாய் சிலை

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புத்துயிர் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலின் முகப்பில் அஹலியா பாய் சிலையை அமைத்து ஓர் பெருமைக்குரிய வரலாற்றை மத்திய அரசு மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது

வீர வரலாற்றை

பாரத தாயின் தவப்புதல்வியாகவும் முகலாய படைகள் ஏற்படுத்திய கரையை துடைத்தெரிந்தவருமான வீரமங்கை அகல்யா பாய் ஹோல்கரின் வீர வரலாற்றை இளைய சமுதாயம் கற்று ராணியின் புகழை மனதில் தாங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.