சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 
தமிழக செய்திகள்

தென்னகத்தின் உயிர்நாடி... 75 ஆண்டுகால சேவை பயணம்: பவள விழா கொண்டாடும் தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வே, சென்னையை தலைமையிடமாக கொண்டு சுமார் 5,100 வழித்தட கிலோமீட்டர் தூரத்தை ஆறு முக்கிய கோட்டங்களின் கீழ் நிர்வகிக்கிறது.

சென்னை,

நாளை தெற்கு ரயில்வே தனது 75-வது நிறுவன நாளை (பவள விழா) கொண்டாடுகிறது.

தெற்கு ரயில்வேயின் இந்த 75 ஆண்டுகாலப் பயணம் (1951-2026), இந்திய ரயில்வேயின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி உருவாக்கப்பட்ட தெற்கு ரயில்வே (Southern Railway), கீழ்க்காணும் மூன்று முக்கிய ரயில்வே அமைப்புகளின் ஒருங்கிணைப்பின் மூலம் உருவாகியது:-

# மெட்ராஸ் மற்றும் தென் மராட்டிய ரயில்வே,

# தென்னிந்திய ரயில்வே

# மைசூர் மாநில ரயில்வே

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ரயில்வே மண்டலம் இதுவாகும். இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.

தோற்றம்

1856 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி, தென்னிந்தியாவின் முதல் ரயில் ராயபுரத்திலிருந்து ஆற்காட்டிற்கு (வாலாஜா சாலை) நோக்கி புறப்பட்டபோது, அது ஒரு புதிய போக்குவரத்து புரட்சியின் தொடக்கமாக அமைந்தது.

கடந்த பல ஆண்டுகளை கொண்ட இரயில்வே விரிவாக்கமானது இன்றைய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கப்பட்டது.

ஆரம்பகாலத்தின் மைல்கற்கள்

மேற்கு கடற்கரை இணைப்பு (1860):

பேப்பூர் மற்றும் கோழிக்கோடு இணைக்கப்பட்டதன் மூலம், அரபிக்கடல் பகுதிக்கும் வங்காள விரிகுடா பகுதிக்கும் (மெட்ராஸ்) இடையிலான நிலப்பரப்பு போக்குவரத்து எளிதானது.

தேசிய ஒருங்கிணைப்பு (1870 - 1900):

சென்னையை பம்பாய் (மும்பை) மற்றும் ஹவுரா (கொல்கத்தா) ஆகியவற்றுடன் இணைத்தது, தென்னிந்தியாவை இந்தியாவின் பிற முக்கிய வர்த்தக மையங்களுடன் இணைத்தது.

நீலகிரி மலை இரயில் (1899):

இது வெறும் போக்குவரத்து மட்டுமல்ல, உலகத்தரம் வாய்ந்த ஒரு பொறியியல் அதிசயம்

யுனெஸ்கோ (UNESCO) அங்கீகாரம் பெற்ற பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது.

முக்கிய வளர்ச்சி படிகள்

ஆரம்பகால நீராவி இன்ஜின்களில் தொடங்கி, இன்று அதிவேக வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயில்கள் வரை உயர்ந்துள்ளது. நிலக்கரி, சிமெண்ட், தானியங்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களைக் கையாளுவதில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

முக்கியமான கட்டமைப்பு மாற்றங்கள்

1951-ல் உருவான மிகப்பெரிய தெற்கு இரயில்வேயிலிருந்து, நிர்வாக வசதிக்காக 1966-ல் தென் மத்திய இரயில்வே மற்றும் 2003-ல் தென்மேற்கு இரயில்வே ஆகிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டன.

தெற்கு இரயில்வே தற்போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்குச் சேவையாற்றி வருகிறது.

தெற்கு இரயில்வே சென்னையை தலைமையிடமாக கொண்டு சுமார் 5,100 வழித்தட கிலோமீட்டர் தூரத்தை ஆறு முக்கிய கோட்டங்களின் கீழ் நிர்வகிக்கிறது.

ஆறு முக்கிய கோட்டங்கள்

# சென்னை # மதுரை # திருச்சி # சேலம் # பாலக்காடு #திருவனந்தபுரம்

பாரம்பரியமும் அடையாளமும்

இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் பழமையான ரயில்வே பாரம்பரிய சின்னங்களையும் பாதுகாத்து வருகிறது.

ரோமனெஸ் பாணியின் அடையாளமாகும்.

சென்னை எழும்பூர்: 1908-ல் கட்டி முடிக்கப்பட்ட இது, முகலாய மற்றும் கோதிக் பாணிகளின் கலவையாகும்.

ராயபுரம் நிலையம் - இந்தியாவில் இன்றும் பயன்பாட்டில் உள்ள மிகப் பழமையான ரயில் நிலையம்

புதிய பாம்பன் பாலம்: ஏப்ரல் 2025-ல் திறக்கப்பட்ட இந்த நவீன பாலம், கப்பல்கள் செல்ல வழிவிடும் வகையில் செங்குத்தாக உயரும் வசதி கொண்டது.

நீலகிரி மலை ரயில்: 1899 முதல் இயங்கி வரும் இது, பற்கள் கொண்ட தண்டவாள அமைப்பை பயன்படுத்தும் இந்தியாவின் ஒரே மலை ரயில் ஆகும். யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட மலை ரயில்வே

நவீன சகாப்தத்தின் மைல்கற்கள்

தெற்கு ரயில்வே உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், அது குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது:

அகல மாற்றம்: முன்பு மீட்டர் கேஜ் மற்றும் அகலப் பாதை என இருவேறு அமைப்புகள் இருந்ததால், பயணிகள் மற்றும் சரக்குகளை ஒரு ரயிலில் இருந்து மற்றொரு ரயிலுக்கு மாற்ற வேண்டிய சிரமம் இருந்தது. 1990-2010 காலகட்டத்தில் நடைபெற்ற தீவிர மாற்றப் பணிகளால், தென்னிந்தியா முழுவதும் தடையற்ற போக்குவரத்து சாத்தியமானது.

மின்மயமாக்கல்: இந்த மண்டலம் தனது 97%க்கும் மேற்பட்ட வழித்தடங்களை மின்மயமாக்கி, 100% மின்மயமாக்கல் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.

இரட்டிப்பாக்குதல் மற்றும் கொள்ளளவு மேம்பாடு: ஒற்றைப் பாதையில் ரயில்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல (Crossing) காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இரட்டைப் பாதையினால் இந்தத் தாமதம் நீக்கப்பட்டு, பயண நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது

நவீன ரயில்களின் அறிமுகம்: தெற்கு ரயில்வேயில் வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் போன்ற நவீன ரயில்களின் அறிமுகம், சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவருக்குமான பயண அனுபவத்தை மாற்றியமைத்துள்ளது.

நிலைய மறுசீரமைப்பு: அம்ரித் பாரத் நிலையத் திட்டம் போன்ற முதன்மை திட்டங்களின் கீழ் வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் முன்னெடுப்புகள்:

மின்னணு பயணச்சீட்டு முறை : புறநகர் ரயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க வரிசையில் நிற்காமல் போன் மூலமே டிக்கெட் எடுக்க இது உதவுகிறது.

ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் (GPS) கருவிகள் மூலம், ரயில் தற்போது எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பதை 'Where is my Train' போன்ற செயலிகளில் பயணிகள் மிகத் துல்லியமாக அறிய முடியும்.

பாதுகாப்பு மேம்பாடுகள்: கணினிமயமாக்கப்பட்ட இந்த முறை தற்போது பெரும்பாலான நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது. இது புள்ளிகள் மற்றும் சமிக்ஞைகளுக்கு இடையே தவறு நடக்காமல் தடுத்து, பாதுகாப்பான ரயில் இயக்கத்தை உறுதி செய்கிறது.

தெற்கு ரயில்வே தனது பாரம்பரியப் பெருமையை சிதையாமல் பாதுகாப்பதோடு, 21-ஆம் நூற்றாண்டின் நவீன தொழில்நுட்பங்களையும் மிக வேகமாக கையாண்டு வருகிறது.

தெற்கு ரயில்வே தனது 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில், 1856-இல் ராயபுரம் - வாலாஜா ரோடு இடையே தொடங்கிய அந்த முதல் பயணம், இன்று வந்தே பாரத் மற்றும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரை வளர்ந்து நிற்பது ஒரு வரலாற்றுச் சாதனை.