சென்னை,
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.55 மணிக்கு சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.