தமிழக செய்திகள்

வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்

வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தனி குழுவை நியமித்துள்ளது. #MadrasHighCourt

சென்னை,

சென்னை உயர்நீதிமன்றம், வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழு குற்றவாளிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான நடைமுறைகளை கண்டறியும் பணியில் ஈடுபடும்.

குற்றவாளிகளை எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருப்பது வேதனை அளிக்கிறது என கூறிய நீதிமன்றம், நியமிக்கப்பட்ட குழு 8 வாரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.