தமிழக செய்திகள்

நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது

ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது.

நல்லம்பள்ளி:-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் 2 நாள் விடுப்பு எடுத்து போராட்டம் அறிவித்தது. அதன்படி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி அலுவலர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் பெரும்பாலான ஊழியர்கள், நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகத்துக்கு பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன. 

SCROLL FOR NEXT