சென்னை,
மக்களுக்கு புரியவில்லை என்பதால் நான் முதல்வன் திட்டத்தின் பெயர் ‘திறன் மேம்பாட்டு திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“எந்த திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. ஒரு திட்டத்தின் பெயர் மக்களுக்கு புரியும்படி இருக்க வேண்டும். ‘நான் முதல்வன்’ என்றால் பலர் குழப்பமடைகின்றனர். ஏதோ முதல்வரை தேர்வு செய்வதற்கான திட்டம் நடக்கிறதோ என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
திறனை மேம்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். எனவே அதற்கு ஏற்றவாறு ‘திறன் மேம்பாட்டு திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்டம் அப்படியே தொடர்கிறது.
நான் முதல்வன திட்டம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள், யாருக்குமே தெரியாது. மக்களுக்கு புரியவில்லை என்பதால் நான் முதல்வன் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதே தவிர, இதில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.