சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் 30 ஆம் தேதி தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியான பாஜக 27 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதில், அவினாசி(தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவினாசி தொகுதியில் திமுக சார்பில் கோகிலா மணி போட்டியிடுகிறார். தவெக சார்பில் கமலி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், அவினாசி தொகுதியை தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் ஆட்சியையும், அவினாசி வாக்காளப் பெருமக்களின் பேரன்போடு அவினாசி தொகுதியையும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும்.
தாமரையை மலரச் செய்வோம்..!
அவினாசி தொகுதியை வளரச் செய்வோம்..!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.