தமிழக செய்திகள்

அமைச்சர் பங்கேற்ற விழாவில் தலைகீழாக பறந்த தேசியக்கொடி!

பின்னர் கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது.

சேலம்,

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாநில அளவிலான 67-வது குடியரசு தின தடகள போட்டிகள் தொடக்க விழா நடந்தது. இந்த போட்டியில் சேலம் உள்பட 38 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தேசியக்கொடி

விழாவில் கலந்துகொள்ள நேற்று காலை 11.15 மணியளவில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் போட்டி நடக்கும் காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்தார். முதலில் அவர் அங்குள்ள கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றினார்.

அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறந்தது. இதைக்கண்டு அங்கிருந்த அமைச்சர், கலெக்டர் இளம்பகவத், லட்சுமணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களும் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது.

SCROLL FOR NEXT