தமிழக செய்திகள்

அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது- அண்ணாமலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் 2 பேர் உயிரிழந்தனர்; பலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் அனுமதி.

வாயுக்கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை தொழிலாளர்கள் பலர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது தொழிற்சாலையில் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அமோனியா வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.

சிகிச்சைக்கு அனுமதித்தனர்

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

அதிர்ச்சி

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பண்ணை ஒன்றில், அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

நலம்பெற வேண்டி கொள்கிறேன்

தமிழக அரசு முழு விசாரணை நடத்தி, விதி மீறல்கள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவாக நலம்பெற வேண்டி கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.