சென்னை,
சென்னையை அடுத்த புழல் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது. விசாரணையில் உள்ள கைதிகளுக்கு மட்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள கைதிகளில் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்படுத்தியதில் ஒரே ஒரு கைதி மட்டும் வாக்களிக்க தகுதி பெற்றவராக இருந்தார். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சரண்(23 வயது) என்ற அந்த கைதி, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நேற்று அவர் மட்டும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் வாக்கு செலுத்தினார்.