தமிழக செய்திகள்

தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறக்கப்படுவதை தள்ளி வைக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்பொழுது தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இது குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடும்.

குழந்தைகள், ஆசிரியர்கள் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.