தமிழக செய்திகள்

காங்கிரசின் போலி பரப்புரையை "பைசா"விற்கு கூட மதிக்காத புதுச்சேரி மக்கள்! - நயினார் நாகேந்திரன்

"செல்லுமிடமெல்லாம் சவுக்கடி" கிடைக்கும் என்பதை காங்கிரஸ் எப்பொழுது தான் உணரப் போகிறதோ என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தட்டாஞ்சாவடி தொகுதியின் இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ள அசோக் ஆனந்தனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

"எஸ்.ஐ.ஆர். மூலமாக பல லட்ச வாக்காளர்களை நீக்கிவிட்டது" தேர்தல் ஆணையம் என்ற, காங்கிரசின் போலி பரப்புரையை "பைசா"விற்கு கூட மதிக்காத புதுச்சேரி மக்கள்!

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதியின் இடைத்தேர்தலில், காங்கிரசின் அனைத்து பொய் பிரசாரங்களையும் முறியடித்து, சுமார் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார் என்.டி.ஏ. வேட்பாளரும், அனைத்திந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் ஆனந்தன்! அன்னாருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்!

செல்லுமிடமெல்லாம் சவுக்கடி

தங்களின் சாதனைகளையும், செயல்பாடுகளையும் மக்களிடம் விளக்கி ஓட்டுக் கேட்காமல், தேர்தல் ஆணையத்தின் மீதான ஆதாரமற்ற புகார்களை, அரசியல் பிரசாரமாக மாற்றினால் இப்படித்தான் "செல்லுமிடமெல்லாம் சவுக்கடி" கிடைக்கும் என்பதை காங்கிரஸ் எப்பொழுது தான் உணரப் போகிறதோ தெரியவில்லை!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT