தமிழக செய்திகள்

செல்போன் பறித்தவர் சிக்கினார்

நெல்லை சந்திப்பில் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்த் (24) என்பவர் திடீரென்று முருகனிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆனந்தை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து செல்போனை மீட்டார்.

SCROLL FOR NEXT