தமிழக செய்திகள்

பெரும்பான்மையை சோதிப்பதற்கான இடம் சட்டமன்றமே: கிரிஷ் சோடங்கர்

அரசியலமைப்பு மரபுகளை மாற்றாதீர்கள் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 2019-ம் ஆண்டு கர்நாடக கவர்னர் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கடிதத்தை தனது சமூக வலைத்த ளப் பதிவில் இணைந்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

கவர்னர், ராஜேந்திர அர்லேகர் பாப் அவர்களே, 2018-ல் கர்நாடக கவர்னரால் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள். அதில், தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டு, அரசியலமைப்பின்படி சபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ராஜ்பவனுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கவர்னர் தனக்குத்தானே எடுத்துக் கொள்ளவில்லை.

பெரும்பான்மையைச் சோதிப்பதற்கான அரசியலமைப்பு ரீதியான மன்றம் சட்டமன்றம் மட்டுமே. நீங்கள் ஆர்.எஸ்.எஸ். பின்னணியைச் சேர்ந்தவராக இருக்கலாம், ஆனால் கவர்னர் என்ற முறையில், அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசியலமைப்பை காப்பது உங்கள் கடமையாகும். அரசியலமைப்பு மரபுகளை மாற்றாதீர்கள்: ஜனநாயக மரபுகளை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் தமிழக மக்களால் கடுமை யாக எதிர்க்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.