சென்னை,
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், ம.தி.மு.க.,நகர செயலாளர் ஆதித்யா-ரமா திருமண வரவேற்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது கட்சிக்கான சோதனையான காலம் முடிந்து விட்டது. எங்களுக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்தது போன்ற அடிப்படையான பிரச்சினைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறோம்.
மேகதாது அணை பிரச்சினைக்காக முதலில் போராடியது நாம் தான். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பல கட்சிகளை ஆலை நிர்வாகம் வளைத்தது.
என்னை மட்டுமே நெருங்க முடியவில்லை. மோடி பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்ததால் அந்த கூட்டணியில் இருந்து விலகினோம்.
நமது கட்சிக்கான சோதனையான காலம் முடிந்து விட்டது. பனிகாலம் முடிந்து வசந்தகாலம் வரப்போகிறது
-9 ஆண்டு கூட்டணியில் அங்கீகாரம் இல்லை, தொண்டர்களின் காயங்களுக்கு மருந்திடுவோம். தன்மானத்தையும், சுயமரியாதையையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.