தமிழக செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்

எந்திரங்களில் ஒவ்வொரு வாக்காளரின் பெயர், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளிடப்படும்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முந்தைய நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதற்காக இவிஎம் என்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அளித்த வாக்கை உறுதி செய்யும் விவிபாட் எந்திரங்கள் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் தயார்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மேலாண்மையை தேர்தல் கமிஷன் செயல்படுத்துகிறது. அதன்படி, வாக்குப்ப திவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்காக 2-ம் கட்டமாக தேர்வு செய்யும் பணிகள் நாளை (16-ந்தேதி) முடிகிறது.

அந்தப் பணிகள் முடிந்தவுடன், வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வரிசை எண், பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை அடங்கிய இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்திலான பேலட் பேப்பரை பொருத்தும் பணி நாளை (16-ந்தேதி) தொடங்க உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் அந்தந்த வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைபெறும்.

அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக (ரேண்டம் முறையில்) வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்களை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட எந்திரங்களின் பட்டியல் மற்றும் ரிசர்வில் வைக்கப்பட்டுள்ள எந்திரங்களின் பட்டியல் போன் றவை அனைத்து வேட்பாளர்களுக்கும் தரப்படும்.

அந்த எந்திரங்களில் ஒவ்வொரு வாக்காளரின் பெயர், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளிடப்படும். இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பொறியாளர் என்று இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த தொகுதிக்கான வேட்பாளர், சின்னம் உள்ளிட்ட விவரங்களை, வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் எந்திரங்களுக்குள் தொழில்நுட்ப ரீதியாக பதிவிறக்கம் செய்வார்கள்.

அப்போது அந்த விவரங்கள் அனைத்தும் அந்த எந்திரங்களின் திரையில் தோன்றும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு அதில் வேட்பாளர் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் முன் னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டப்படும். வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் வகையில் பட்டனை அழுத்தி, அந்த வாக்கு அவருக்குத்தான் சென்றதா? என்பதையும் உறுதிப்படுத்தி காட்டுவார்கள். அதை உறுதி செய்த பின்னர், அந்த வாக்குகளை அழித்துவிட்டு அந்த எந்திரங்கள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்குப்பதிவு நாளன்று இந்த பட்டியலில் இருக்கும் எந்திரங் களே ஒதுக்கப்பட்ட அந்தந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத் தப்படும். இதுகுறித்த விரிவான அறிவுறுத்தல்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதை https://www.eci.gov.in/evm-vvpat என்ற வலைத்தளத்தில் காணலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.