தமிழக செய்திகள்

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் - இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என்று இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தைக்கு பின் இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி மட்டுமே இன்று பேசினோம். கடந்த தேர்தலில் எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

நாளை மாலை மீண்டும் சந்தித்து திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த முடிவை அறிவிப்போம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதி என இறுதி செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.