தமிழக செய்திகள்

தென்காசி அருகே காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கட்டிடத்தின் மேற்கூரை சேதம்

கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளிலும் கான்கிரீட் பூச்சுகள் பலவீனமான நிலையில் இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் மேற்கூரையின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கலைக் கல்லூரி

கல்லூரி கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் ஆங்காங்கே பலவீனமடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மேற்கூரைப் பூச்சு திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளிலும் கான்கிரீட் பூச்சுகள் பலவீனமான நிலையில் இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அவை எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழும் அபாயம் உள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, கல்லூரி கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து, பலவீனமாக உள்ள மேற்கூரை கான்கிரீட் பூச்சுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT